Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் கொள்முதலில் முழு வெளிப்படைத்தன்மை: அமைச்சர் திட்டவட்டம்

மின் கொள்முதலில் முழு வெளிப்படைத்தன்மை: அமைச்சர் திட்டவட்டம்

அமலில் இருந்த இருதரப்பு ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு, டெண்டர் மூலம் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

மின்வாரிய கொள்முதலில் முந்தைய நடைமுறைகள் மாற்றப்பட்டு முழு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒரு யூனிட் மின்சாரம் ரூ41-க்கு வாங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் எரிசக்தி துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஒரு யூனிட் மின்சாரம் ரூ41-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. அதிக விலைக்கு வந்த அந்த டெண்டரை நாங்கள் நிராகரித்துவிட்டோம். 

கடந்த காலங்களில் மின்சாரத்தை நிறுவனங்களிடம் நேரடியாகப் பேசி வாங்கும் ‘இருதரப்பு ஒப்பந்த முறை’ அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த முறையை ரத்து செய்துவிட்டு, டெண்டர் மூலம் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலை கோரும் நிறுவனங்களிடம் இருந்தே மின்சாரம் வாங்கப்படுகிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான மின்தேவையைக் கருத்தில் கொண்டு நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், சேமிப்பதற்கும் ஏதுவாக புதிய ‘மின்கலச் சேமிப்புக் கொள்கை’ உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் கொள்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் மாநிலத்தின் மின்தேவை சுமார் 16,000 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இருப்பினும், நமது உச்சபட்ச மின்தேவையான 21,000 மெகாவாட் அளவீட்டைக் கருத்தில் கொண்டே மின்வாரியம் செயல்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில் 'எல் நினோ தாக்கத்தால் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போதைய மின்தேவையை எவ்வித தடையுமின்றி சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மின்வாரியம் தற்போதே தொடங்கிவிட்டது.இவ்வாறு அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
நெருக்கடியிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
அடுத்த செய்தி
லாரிகளில் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தொடர்புடைய செய்திகள்